சித்திரை மாத ராசி பலன்கள்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MAA+

ரிஷபம்


(கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை

தைரிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சனி - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன் - விரைய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் -  என கிரகநிலை அமைந்திருக்கிறது.

வெள்ளை மனதுடன் அனைவரிடமும் பழகும் ரிஷபராசியினரே இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சியாக இருப்பதால் பல நல்ல பலன்களை பெற முடியும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். பாக்கியஸ்தான செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலன்களையே தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். சுகாதிபதி சூரியன் சஞ்சாரம் ஆறாமிடத்தைப் பார்ப்பதால் திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும்.

தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.  

பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.

கலைத்துறையினருக்கு நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

அரசியல்துறையினருக்கு வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.

மாணவர்களுக்கு: மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

கார்த்திகை:

இந்த மாதம் எதிர்ப்புகள்  விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும்.  முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். 

ரோகினி:

இந்த மாதம் காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக பாதியில்  நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். காரியத்தை நிறைவேற்ற  தேவையான மனோ பலம் உண்டாகும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.

மிருகசீரிஷம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.

பரிகாரம்:  வெள்ளி அன்று ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளிmesham rishabam mithunam kadakam simmam kanni thulam viruchigam dhanush magaram kumbam meenam