aa

பங்குனி மாத ராசி பலன்கள்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீஹேவிளம்பி வருஷம் - உத்தராயணம் - சிசிரரிது - மாசி மாதம் 30ம் தேதி - புதன்கிழமை - அதற்குச் சரியான ஆங்கிலம் 14 மார்ச்சு 2018 - அன்றைய தினம் புதன்கிழமையும் - கிருஷ்ணபக்ஷ திரயோதசியும் - அவிட்ட நக்ஷத்ரமும் - சிவ நாமயோகமும் - கரஜி கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 11.12க்கு (உதயாதி நாழிகை: 41.56) விருச்சிக லக்னத்தில் பங்குனி மாதம் பிறக்கிறது.

கிரகநிலை:

மாதம் பிறக்கும் போது கடக ராசியில் ராகு - விருச்சிக ராசியில் குரு (வ) - தனுசு ராசியில் செவ்வாய், சனி - மகர ராசியில் கேது - கும்ப ராசியில் சந்திரன் - மீன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்:

பங்குனி 02 - 16.03.2018 - வெள்ளிக்கிழமை - புதன் வக்ரம் ஆரம்பம்

பங்குனி 13 - 27.03.2018 - செவ்வாய்கிழமை - மாலை மணி 3.24க்கு சுக்கிரன் மேஷ ராசிக்கு மாறுகிறார்

பங்குனி 23 - 06.04.2018 - வெள்ளிக்கிழமை - புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்

பங்குனி 28 - 11.04.2018 - புதன்கிழமை - அதிகாலை 5.49க்கு குரு பகவான் துலா ராசிக்கு மாறுகிறார்

mesham rishabam mithunam kadakam simmam kanni thulam viruchigam dhanush magaram kumbam meenam