தகவல் பாதுகாப்பில் சொதப்பிய ஃபேஸ்புக்! மாற்றாக வருது ஹலோ!!
Author: Ishwarya G | Posted Date : 10:00 (12/04/2018) A+       A-

தகவல் பாதுகாப்பில் சொதப்பிய ஃபேஸ்புக்! மாற்றாக வருது ஹலோ!!

Apr 12


பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய ஃபேஸ்புக்குக்கு மாற்றாக ஹலோ என்ற ஆப் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் நிறுவனம், பயனர்களின் தகவல்களை திருடி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ஃபேஸ்புக் நிறுவனம் ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்டது. இதையடுத்து இதுபோன்ற பிரச்னை இனி நிகழாது என்றும் பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையில், ஆப் டெவலப்பர்கள் மேம்படுத்தப்பட்டு ‘பக் பவுன்டி’ என்ற திட்டத்தின் மூலம் பிழைகள் சரி செய்யப்பட்டு வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் தெரிவித்திருந்தார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கி ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் நம்பிக்கையை இழந்து அவப்பெயர் வாங்கியது.


இந்நிலையில், ஃபேஸ்புக்குக்கு போட்டியாக ஃபேஸ்புக் போன்றே ஹலோ என்ற ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்க்குட் சமூக வலைதளத்தை உருவாக்கிய கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஆர்குட் பையூகோக்டேன் என்பவரால் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. ஹலோ.காம் என்ற தளம் மூலமாகவும், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஃபேஸ்புக் போன்றே ஹலோ ஆப்பில் உலகில் எந்த மூலையிலும் உள்ள நண்பர்களை இணைத்து சாட்டிங் செய்வது, தகவல் பரிமாற்றம், மெசன்ஜர் என அனைத்து அம்சங்களும் உள்ளன. பிரேசில் நாட்டில் மட்டும் சுமார் 10 லட்சம் பயனாளர்களை ஹலோ ஆப் கொண்டுள்ளது குறிப்பிடதக்கது. 


RELATED STORIES