கூகுள் சிஇஓ சுந்தை பிச்சைக்கு அடித்த 'ஜாக்பாட்'
Author: Newstm Desk | Posted Date : 04:57 (24/04/2018) A+       A-

கூகுள் சிஇஓ சுந்தை பிச்சைக்கு அடித்த 'ஜாக்பாட்'

Apr 24

கூகுள் நிறுவனத்தின் பங்குகள் அதிகரித்துள்ளதால் அந்நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் மதிப்பு ரூ. 2,500 கோடியாக உயர்ந்துள்ளது. 

உலகின் முன்னணி தேடல் பொறி நிறுவனமான கூகுளில் சிஇஓவாக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் பதவியேற்கும்போது, அவரிடம் ஆல்பெபெட் இங்க் நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை கூகுள் நிறுவனம் அளித்திருந்தது. கூகுள் நிறுவனத்தின் விதிமுறைகளின் படி அந்நிறுவனத்தின் ஊழியருக்கு அளிக்கப்படும் பங்குகளை 3 ஆண்டுகளுக்கு விற்க முடியாது. இந்நிலையில் நாளையோடு இந்த பங்குகள் அவரிடம் அளிக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

சுந்தர் பிச்சை பதவியேற்ற பின், அந்த பங்குகளின் விலை அபரிவிதமாக உயர்ந்துள்ளன. 2014ம் ஆண்டு சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்ட பங்குகளின் தற்போதைய மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.2,508 கோடி ஆகும். எனவே பங்கு தொகையாக சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி கிடைத்துள்ளது. சமீப காலங்களில் ஒரு பொதுத்துறை நிறுவனம் தனது ஊழியருக்கும் வழங்கும் அதிகபட்ச தொகையாக இது பார்க்கப்படுகிறது.

சுந்தர் பிச்சையைத் தவிர்த்து, கூகுள் பங்குகளை வைத்திருக்கும் அனைவருக்கும் லாபம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என பங்குவர்த்தக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.