Aug
22

கிடு கிடுவென உயர்ந்தது காஜல் அகர்வால் சம்பளம்
Author: bala | Posted Date : 10:30 (22/08/2017)A+       A-

கிடு கிடுவென உயர்ந்தது காஜல் அகர்வால் சம்பளம்

Aug 22
Kajal-Agarwal-hiked-salary , கிடு கிடுவென உயர்ந்தது காஜல் அகர்வால் சம்பளம்

தமிழில், ஒரே நேரத்தில் விஜய்-அஜித் படங்களில் நடித்திருக்கும் நடிகை காஜல் அகர்வால், தனது சம்பளத்தை கிடு கிடுவென உயர்த்தி உள்ளார்.

நடிகை காஜல் அகர்வால், கார்த்தியுடன் நடித்த நான் மகான் அல்ல, விஜய்யுடன் நடித்த துப்பாக்கி, ஜில்லா, தனுசுடன் நடித்த மாரி, விஷாலுடன் நடித்த பாயும்புலி படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதால் அவரது மார்க்கெட் உயர்ந்தது.

தமிழைப் போலவே,தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களோடு நடித்து வரும் காஜல் அகர்வால் அங்கு ரூ.1 கோடி சம்பளமாக வாங்குகிறார். ஆனால், தமிழில் மட்டும் அதிக சம்பளம் கேட்டு டிமாண்ட் செய்தார். இதனால், அவர் தனது சம்பளத்தை ரூ.1 கோடியில் இருந்து ரூ.1½ கோடியாக உயர்த்தினார்.

இந்தநிலையில் காஜல் அகர்வாலுக்கு; விஜய் ஜோடியாக மெர்சல் படத்திலும், அஜித் ஜோடியாக விவேகம் படத்திலும், நடிக்க வாய்ப்புகள் வந்தன. இரண்டு பெரிய நடிகர்களுடன் ஒரே நேரத்தில் நடிப்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது இரண்டு படங்களும் திரைக்கு வர தயாராகி உள்ளன. விவேகம் படம் நாளை மறுநாள் வெளி வருகிறது. மெர்சல் தீபாவளிக்கு வெளியாகிறது. இரண்டுமே பெரிய ஹீரோக்கள் நடித்து, பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ளதால், இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்புகள் உள்ளன. அதிக வசூல் குவிக்கும் என்றும் வினியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் நம்புகின்றனர்.

விவேகம், மெர்சல் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருவதை தொடர்ந்து காஜல் அகர்வால் தனது சம்பளத்தை ஒன்றரை கோடியில் இருந்து, ரூ.2 கோடியாக உயர்த்திவிட்டதாக கோலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.

தமிழ் நடிகைகளில் ரூ.4 கோடி சம்பளம் வாங்கி முதல் இடத்தில் இருக்கிறார் நயன்தாரா. இப்போது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தி இருப்பதால் அவருக்கு அடுத்த இடத்திற்கு வந்திருக்கிறார் காஜல்.