Aug
23

வெளியானது இம்சை அரசன் - 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Author: anish | Posted Date : 07:59 (23/08/2017)A+       A-

வெளியானது இம்சை அரசன் - 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Aug 23
Imsai-Arasan-2-First-Look-Poster-Released , வெளியானது இம்சை அரசன் - 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நகைச்சுவை நடிகர் வடிவேலு முதல் முறையாக இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். 2006-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இயக்குனர் சிம்பு தேவன் இயக்கியிருந்த இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்து வழங்கி இருந்தார்.

கடந்த மாதம் இந்த படம் தனது 11-வது ஆண்டை கொண்டாடியது. அப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வர உள்ளதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்திருந்தார். இரண்டாம் பாகத்திற்கு இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி என பெயரிட்டுள்ளனர். இம்சை அரசன் படத்தின் 2-ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கையில் செங்கோலுடன் கொம்பு மீசை வைத்துக் கொண்டு டெரர் லுக்குடன் வடிவேலு நிற்பது போன்று இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனமும் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இன்று முதல் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. முன்னதாக இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ நேற்று வெளியிடப்பட்டிருந்தது.