காதலர் தினத்தில் அனிருத் தரும் டிரீட்
Author: Bala Bharathi | Posted Date : 03:00 (13/02/2018) A+       A-

காதலர் தினத்தில் அனிருத் தரும் டிரீட்

Feb 13


இசையமைப்பாளர் அனிருத், காதலர் தினத்தை முன்னிட்டு 'ஜூலி..' என்கிற சிங்கிள் ட்ராக்கை வெளியிடுகிறார். 

துள்ளல் இசையைத் தந்து இன்றைய இளம் தலைமுறையின் இதயங்களில் நிறைந்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத், அவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த போதிலும், அவ்வப்போது ஆல்பங்களையும் வெளியிட்டு ஆரவாரம் செய்கிறார். சிம்புவுடன் அனிருத் கூட்டணி போட்டு உருவாக்கிய 'பீப்' ஆல்பம் பெரும் பிரச்னையாக மாறி இருவருக்கும் பெரிய தலைவலியை உண்டாக்கியது. அதிலிருந்து மீண்டு வர சிம்புவும், அனிருத்தும் பெரும் சிரமப்பட்டனர்.   

இந்நிலையில், 'காதலர் தின டிரீட்' ஆக  'ஜுலி..' என்கிற சிங்கிள் ட்ராக் பாடலை உருவாக்கியிருக்கிறார் அனிருத். இந்தப் பாடலை நயன்தாராவின் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். சோனி மியூசிக் பாடலை வெளியிடுகிறது. 


காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14-ஆம் தேதியான நாளை,  'ஜூலி என்ற சிங்கிள் டிராக்கை வெளியிடப் போவதாக அனிருத் தனது  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

அனிருத் ஏற்கனவே, `எனக்கென யாரும் இல்லையே', `அவளுக்கென்ன', `ஒன்னுமே ஆகல'  போன்ற ஆல்பங்களை காதலர் தினத்தன்று வெளியிட்டிருக்கிறார்.