பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
Author: Bala Bharathi | Posted Date : 03:41 (13/02/2018) A+       A-

பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

Feb 13


இயக்குநர் பாரதிராஜா மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யும்படி காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா, வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, இந்து மக்கள் முன்னணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த புகார் மீது விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்து மக்கள் முன்னணி சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்த ஐகோர்ட், இயக்குநர் பாரதிராஜா மீதான புகார் குறித்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. 

வன்முறையை தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதாக அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.