விஜய் சேதுபதி படம் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு செல்கிறது
Author: Bala Bharathi | Posted Date : 06:00 (13/02/2018) A+       A-

விஜய் சேதுபதி படம் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு செல்கிறது

Feb 13


விஜய் சேதுபதி நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

'ஆரண்ய காண்டம்' படத்துக்குப் பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா 'சூப்பர் டீலக்ஸ்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். 

இதில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், இயக்குநர் மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தயாரித்துள்ளார். 

இதில் ஷில்பா என்ற திருநங்கையாக விஜய்சேதுபதியும், வேம்பு என்ற கதாபாத்திரத்தில் சமந்தாவும், பாதிரியார் வேடத்தில் இயக்குநர் மிஷ்கினும் நடிக்கின்றனர். இதனால் இப்படம் பற்றி எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இப்படத்துக்கு யுவன் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம், பி.எஸ்.வினோத், நீரவ்ஷா என மூன்று  ஒளிப்பதிவாளர்கள் படத்தில் பணிபுரிந்துள்ளனர். 


சில மாதங்கள் இதன் படப்பிடிப்பு தடைபட்டு, பிறகு விறு விறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று, தற்போது, இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நெருங்கியுள்ளனர். இதொவொரு மாறுபட்ட கதை என்பதால் இந்தப் படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்ப படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே, படப்பிடிப்பை சீக்கிரத்தில் முடித்து, திரைப்பட விழாவுக்கு அனுப்பும் வேகத்தோடு செயல்படுகின்றனர். RELATED STORIES