ஆபாச இணைய தளங்களுக்கு 'ஆப்பு' வைக்க வரும் படம்!
Posted Date : 03:27 (13/03/2018) A+       A-

ஆபாச இணைய தளங்களுக்கு 'ஆப்பு' வைக்க வரும் படம்!

Mar 13


உலகெங்கும் பரவிக் கிடக்கும் ஆபாச இணைய தளங்களுக்கு 'ஆப்பு' வைக்கும் விதமாக 'எக்ஸ் வீடியோஸ்' என்கிற படம் தயாரகியுள்ளது.

தமிழ், இந்தி என இருமொழிகளில் தயாராகியுள்ள படம் 'எக்ஸ் வீடியோஸ்'. இதில் புதுமுகங்கள்  அஜய்ராஜ், ஆக்ருதி சிங், நிஜய், ஷான், பிரபுஜித், விஷ்வந்த்,  அர்ஜுன், அபினவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சஜோ சுந்தர் இயக்கியிருக்கும் இப்படத்தை, கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயரித்துள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படம் பற்றி இயக்குநர் சஜோ சுந்தர் கூறுகையில்,  

"எக்ஸ் வீடியோஸ் என்பது ஆபாச இணையதளம் என்று நினைக்க வேண்டாம். இந்தப் படத்தைப் பொருத்தவரையில், எக்ஸ் என்பது தவறு என்று அர்த்தம் கொள்ளும் வகையில்தான் தலைப்பு வைத்துள்ளேன்.இது உலகெங்கும் பரவிக் கிடக்கும்  ஆபாச இணைய தளங்கள் பற்றிப் பேசுகிற படம். அப்படிப்பட்ட இணைய தளங்களின் பெயரில் உலகளாவிய மாஃபியா கும்பல் செய்யும் அநியாயங்களைச் சொல்கிற படம்.ஒவ்வொரு தனி மனிதனின் சுதந்திரத்தில் ஊடுருவி அவனது நிம்மதியைக் குலைக்கும் ஆபத்தைச் சொல்கிற படம்.


இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளிஉலகத்துக்கு வந்தே தீரும் .ஆபாச இணைய தளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இப்படம் உருவாகியிருக்கிறது" என்றார். 


RELATED STORIES