அமிதாப்பச்சன் குணமடைய பிரார்த்திக்கிறேன்! - ரஜினி
Posted Date : 04:22 (13/03/2018) A+       A-

அமிதாப்பச்சன் குணமடைய பிரார்த்திக்கிறேன்! - ரஜினி

Mar 13


தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கற்றதால், உடல் சோர்வு ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் அமிதாப்பச்சன் விரைவில்குணமடைய பிரார்த்தனை செய்வதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.   

இமயமலை பகுதிக்கு ஆன்மீகப் பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த், உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, தனது நண்பரும், நடிகருமான அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக கூறினார். மேலும் தான் இங்கு ஆன்மீக பயணமாகவே வந்துள்ளேன். அரசியல் குறித்து அதற்கான களத்தில் பேசலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


'தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான்' என்ற படத்தில் நடித்து வரும் அமிதாப் பச்சன், இரவு நேரத் தூக்கமில்லாமல், ஓய்வின்றி தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் உடல் சோர்வு ஏற்பட்டு, ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 


RELATED STORIES