மகள் பற்றிய வதந்திக்கு கவுதமி முற்றுப்புள்ளி!
Posted Date : 05:05 (13/03/2018) A+       A-

மகள் பற்றிய வதந்திக்கு கவுதமி முற்றுப்புள்ளி!

Mar 13


ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியான தனது மகள் பற்றிய வதந்திக்கு நடிகை கவுதமி விளக்கமளித்திருக்கிறார். 

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படம் தற்போது தமிழில் 'வர்மா' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. பாலா இயக்கும் இந்தப் படத்தில் 'சீயான்'விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். 'இ 4 எண்டர்டெயின்மெண்ட்’நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை நேபாளம் காத்மண்டுவில் வெற்றிகரமாக முடித்துத்  திரும்பியுள்ளனர். 

இதில் நாயகியாக நடிக்க வைக்க முதலில், 'சில்லுனு ஒரு காதல்'படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவிடமும், பிறகு, 'அர்ஜுன் ரெட்டி'பட நாயகி ஷாலினி பாண்டேவிடமும் பேச்சுவார்த்தை நடந்தது. 

இறுதியாக, பிரபல நடிகை கவுதமி மகள் சுப்புலட்சுமியை நடிக்க வைக்கும் திட்டத்தில் இயக்குநர் பாலா இருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல் வெளியானது. 

அந்த தகவல் குறித்து நடிகை கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், "எனது மகள் சுப்புலட்சுமி, சினிமாவில் அறிமுகமாகவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதில் உண்மை இல்லை. சுப்புலட்சுமி தற்போது அவளது மேற்படிப்பில் பிசியாகிவிட்டார். எனவே, தற்போது படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை, உங்கள் அன்புக்கு நன்றி" என கூறியிருக்கிறார்.