சூர்யா - கே.வி.ஆனந்த் மீண்டும் கூட்டணி!
Posted Date : 05:42 (13/03/2018) A+       A-

சூர்யா - கே.வி.ஆனந்த் மீண்டும் கூட்டணி!

Mar 13


நடிகர் சூர்யாவும், இயக்குநர் கே.வி.ஆனந்தும் மீண்டும் கூட்டணி அமைக்கின்றனர். சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இயக்குநர் கே.வி.ஆனந்த், நடிகர் சூர்யாவை வைத்து 'அயன்', 'மாற்றான்'  என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் மூன்றாவது முறையாக  நடிகர் சூர்யாவுடன் கூட்டணி சேர்கிறார்  இயக்குநர் கே.வி.ஆனந்த்.  

இந்த தகவலை கே.வி.ஆனந்த் தனது ட்விட்டரில் சற்றுமுன்பு அறிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, கலை இயக்குநராக கிரண் பணியாற்றுகிறார். இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கும் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். இது சூர்யாவின் 36 -வது படமாகும்.

இதையடுத்து, சூர்யாவின் 37 -வது படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த் அல்லது ‘இறுதிச்சுற்று‘ சுதா கொங்கரா என இரண்டு பெயர்கள் அடிபட்டன. இந்தப் போட்டியில் கே.வி.ஆனந்த் முந்தியுள்ளார்.