தமிழ் சினிமாவை குறிவைக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்!
Author: Bala Bharathi | Posted Date : 09:00 (18/03/2018) A+       A-

தமிழ் சினிமாவை குறிவைக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

Mar 18


பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன், தமிழ் சினிமாவுக்கு வருகிறார். 

சமீபகாலமாக தென்னிந்திய மொழி நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவை குறிவைத்து களத்தில் குதிக்கின்றனர். அதிலும் குறிப்பாக, தெலுங்கு ஹீரோக்களின் வரவு தான் அதிகமாக உள்ளது.‘பாகுபலி’படத்தின் ஹிட்டுக்குப் பிறகு பிரபாஸ், ராணா, சச்சின், ‘அர்ஜுன் ரெட்டி’விஜய் ஆகியோர் தமிழ் சினிமாவில் காலடி வைத்துள்ளனர். அந்த வரிசையில், தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அல்லு அர்ஜுன் லேட்டஸ்ட் வரவாக இருக்கிறார். அவர், ‘என் பெயர்  சூர்யா என் வீடு இந்தியா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். 


தன்னுடைய அதிரடி நடிப்பினாலும், நடன திறமையாலும் தனக்கென ஒரு ரசிகர் படையை வைத்திருக்கும் அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் ராணுவ வீரனாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். தமிழ் , தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் சரத்குமார், ‘ஆக்‌ஷன் கிங்’அர்ஜுன், நதியா, சாய் குமார், சாருஹாசன், ஹரிஷ் உத்தமன், பொம்மன் ஹிராணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்தப் படத்துக்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, விஷால்- சேகர் இரட்டையர் இசை அமைக்க, பா.விஜய் வசனம்-பாடல்கள் எழுத, வி.வம்சி இயக்க, ராமலெக்ஷ்மி சினி கிரியேஷன்ஸ் சார்பில் லகடப்பாடி ஸ்ரீஷா ஸ்ரீதர் தயாரிக்கிறார்.


RELATED STORIES