காஜல் அகர்வால் இரட்டை சவாரி..!
Author: Bala Bharathi | Posted Date : 04:05 (18/03/2018) A+       A-

காஜல் அகர்வால் இரட்டை சவாரி..!

Mar 18


ஒரே நேரத்தில் தமிழ் – தெலுங்கு என இரட்டை சவாரி செய்கிறார் காஜல் அகர்வால். தமிழைப் போலவே தெலுங்கிலும் காஜலுக்கு செல்வாக்கு உள்ளதால், சாமர்த்தியமாக பேலன்ஸ் செய்து அதை தக்கவைத்தும் கொள்கிறார். 

காஜல் அகர்வால் கைவசம் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ படமும், தெலுங்கில் ‘எம்.எல்.ஏ’ என்கிற படமும் உள்ளது. இதில் தெலுங்கில் உருவாகி திரைக்கு வர தயாராக இருக்கும் ‘எம்.எல்.ஏ’படத்தில் ஹீரோவாக கல்யாண் ராம் நடித்துள்ளார். இப்படத்தை உபேந்திரா மாதவ் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் பிரம்மானந்தம், வெண்ணிலா கிஷோர், ரவிகிஷன், அஜய் ஆகியோர் நடித்துள்ளனர். 


மணிஷர்மா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிரசாத் முரெல்லா ஒளிப்பதிவு செய்துள்ளார். ப்ளூ பிளானட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட‘எம்.எல்.ஏ’படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது. வெகு விரைவில் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப்  படத்தை வரும் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.RELATED STORIES