‘கண்ணே கலைமானே’படக்குழுவிலிருந்து வெளியேறிய தமன்னா!
Author: Bala Bharathi | Posted Date : 12:01 (18/03/2018) A+       A-

‘கண்ணே கலைமானே’படக்குழுவிலிருந்து வெளியேறிய தமன்னா!

Mar 18


நடிகை தமன்னா, சமீபத்தில் தனது காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டு 'கண்ணே கலைமானே' படக்குழுவிலிருந்து குட் பை சொல்லி சென்றார். 

இயக்குநர் சீனு ராமசாமி ஒரு சிறந்த படைப்பாளி என்பதை அவரின் ஒவ்வொரு படைப்பும் அறிவிக்கின்றன. ‘தென்மேற்கு பருவகாற்று’,‘தர்மதுரை’போன்ற சிறந்த படங்களை கொடுத்த சீனு ராமசாமி இப்போது ‘கண்ணே கலைமானே’என்கிற படத்தை இயக்கி வருகிறார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் படத்தை தயாரித்து ஹீரோவாகவும்  நடிக்கிறார் உதயநிதி. இதில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில், கவி பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுயுள்ளார். 


சமீபத்தில் தனது காட்சிகளை முடித்திருக்கும் தமன்னா, 'கண்ணே கலைமானே' பட அனுபவம் குறித்து பேசுகையில், '' அதிகம் பேசாமலேயே, நட்சத்திரங்களுக்கு அவர்களது கதாபாத்திரத்தையும், தனக்கு என்ன வேண்டும் என்பதையும் மிக சிறப்பாக விளக்கி, வேலை வாங்குபவர்  இயக்குநர் சீனு ராமசாமி. 'தர்மதுரை' படத்திற்கு பிறகு அவருடன் சேர்ந்து மீண்டும்  பணிபுரிந்தது சுகமான அனுபவம். எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களின் வரிசையில் 'கண்ணே கலைமானே' நிச்சயம் இடம் பெறும். 

இந்த படத்தில் உதயநிதியின் கதாபாத்திரத்தையும், நடிப்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள். அவ்வளவு சிறப்பாக அவர் நடித்துள்ளார். 'கண்ணே கலைமானே' படத்தின் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்'' என்றார். 


RELATED STORIES