தயாரிப்பாளர் ஆகிறாரா தீபிகா படுகோனே?
Author: Newstm Desk | Posted Date : 07:34 (16/04/2018) A+       A-

தயாரிப்பாளர் ஆகிறாரா தீபிகா படுகோனே?

Apr 16

நடிகைகள் அனுஷ்கா சர்மா, பிரியாங்கா சோப்ராவை தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனே திரைப்பட தயாரிப்பில் ஈடுப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பிரியங்கா சோப்ரா 'பெர்பல் பெப்பல்ஸ்' என்ற நிறுவனத்தையும் அனுஷ்கா சர்மா 'கிளீன் ஸ்லேட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். 

இவர்களை தொடர்ந்து தற்போது தீபிகா படுகோனேவும் திரைப்பட தயாரிப்பில் குதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தற்போது தயாரிப்பில் ஆர்வம் வந்துள்ளதாகவும். விரைவில் ஒரு நிறுவனம் தொடங்கி நல்ல கதையம்சம் கொண்ட படங்களை உருவாக்க தயாரிக்க உள்ளார் எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. 

தற்போது தீபிகா இர்பான் கானுடன் இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால் இர்பான் கானின் உடல் நலக்குறைவு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.