ஜூலியட்டாக ஆலியா பட்
Author: Disha | Posted Date : 07:18 (16/04/2018) A+       A-

ஜூலியட்டாக ஆலியா பட்

Apr 16


நடிகை ஆலியா பட்டும், ரன்வீர் சிங்கும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் 'கல்லி  பாய்' படத்தின் ஷூட்டிங் நிறைவுப் பெற்றுள்ளது. 

இயக்குநர் ஸோயா அக்தர் இயக்கும் இந்தப் படத்தை எக்ஸெல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்திருக்கிறது. கடைசி நாள் படப்பிடிப்பை மும்பை ரயில்வே ஸ்டேஷனில் முடித்திருக்கிறார்கள் படக்குழுவினர். இதில் ஆலியா பட் ஸோயா அலி எனும் இஸ்லாமியப் பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.   விவான் ஃபெர்ணான்டஸ், நாவத் ஷேக் ஆகிய ரேப் பாடகர்களை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

ரோமியோ-ஜூலியட் காதல் சீக்வென்ஸும் படத்தில் அதிகம் இருப்பதால் அடுத்தாண்டு காதலர் தின விருந்தாக படத்தை வெளியிட இருக்கிறாராம் இயக்குநர். 

புது காம்போ எப்படி இருக்கும்...?