சீனு ராமசாமியுடன் இணையும் சமுத்திரகனி
Author: Disha | Posted Date : 06:48 (16/04/2018) A+       A-

சீனு ராமசாமியுடன் இணையும் சமுத்திரகனி

Apr 16


இயக்குநர் சீனு ராமசாமி தற்போது 'கண்ணே கலைமானே' படத்தின் போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாக இருக்கிறார். இதில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கிடையே தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். 

தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சமுத்திரகனியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, "விரைவில் சகோதரர் சமுத்திரகனி நடிக்க  நான் இயக்க இணைவதென முடிவானது" என பதிவிட்டுள்ளார். இதனை சமுத்திரகனியும் உறுதிப் படுத்தியுள்ளார். 

நாடோடிகள்-2, வடசென்னை, காலா என அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் சமுத்திரகனியின் லிஸ்டில் தற்போது சீனு ராமசாமியின் படமும் இணைந்துள்ளது. 

கருத்துப் படமா இருக்குமோ...?