60 ஆண்டுகளுக்குப் பிறகு 'நாடோடி மன்னன்' செய்த சாதனை!
Author: Bala Bharathi | Posted Date : 09:44 (16/04/2018) A+       A-

60 ஆண்டுகளுக்குப் பிறகு 'நாடோடி மன்னன்' செய்த சாதனை!

Apr 16


நவீன தொழிநுட்பத்தில் வெளிவந்திருக்கும் எம்.ஜி.ஆரின் 'நாடோடி மன்னன்' திரைப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனையை செய்திருக்கிறது. 

1958 -ம் ஆண்டு எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்து, இயக்கி, தயாரித்த மாபெரும் வெற்றிப் படம் 'நாடோடி மன்னன்', அந்தக் காலகட்டத்தில் வசூல் சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்டது. எம்.ஜி.ஆர் இயக்குநர் அவதாரம் எடுத்த இந்தப் படத்தின் கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும், திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள். 

இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடிகளாக சரோஜாதேவியும், பானுமதியும் நடித்திருந்தனர். மேலும் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், எம்.என்.ராஜம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். 

அன்றைய காலகட்டத்திலேயே ரூ.1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ரூ.11 கோடி வசூலை குவித்தது மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆரின் அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணை புரிந்தது இந்தப் படம்.


இவ்வளவு பெருமைகளை உள்ளடக்கிய இத்திரைப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு 25 நாட்களைக் கடந்து ரீ-ரிலீசிலும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறது 'நாடோடி மன்னன்'. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் விழா நடத்தப்பட்டது. 

இந்த விழாவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை.துரைசாமி கலந்துகொண்டார். அவருடன் ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


RELATED STORIES