தமிழ் படத்தில் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்
Author: Bala Bharathi | Posted Date : 02:07 (21/04/2018) A+       A-

தமிழ் படத்தில் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்

Apr 21


'சந்தோஷத்தில் கலவரம்' என்கிற தமிழ் படத்துக்கு பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் பணியாற்றியுள்ளார்.  

ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் திம்மா ரெட்டி தயாரிக்கும் படம் 'சந்தோஷத்தில் கலவரம்'. இந்தப் படத்தில் புதுமுகங்கள் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல இயக்குநரும், வில்லன் நடிகருமான ரவி மரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்தப் படத்துக்கு பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் பவுலியஸ் ஒளிப்பதிவு செய்கிறார். பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய இவர், இப்படத்துக்காக அமெரிக்காவிலிருந்து வந்துள்ளார். இவருடன் ஷிரவன்குமார் என்பவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவநக் இசையமைக்க, கபிலன், மணி அமுதன், ப்ரியன்  ஆகியோர் பாடல்களை எழுத, பல குரும்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களை இயக்கிய கிராந்தி பிரசாத் இந்தப் படத்தை இயக்குகிறார்.


இந்தப் படம் பற்றி இயக்குநர் கிராந்தி பிரசாத் கூறுகையில், "ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் 'தீமைக்கும் நன்மைக்கும்  இடையில் நடக்கும் மோதல் ' என்கிற டேக் லைன் போட்டுள்ளோம். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம்  என்றாலும், இதில் நட்பு, காதல், அன்பு, காமெடி, ஆன்மிகம் எல்லாம் கலந்துள்ளன" என்கிறார் இயக்குநர் கிராந்தி பிரசாத் .