விஜய் சேதுபதியின் இயக்குநருடன் கைக்கோர்க்கும் ஹரீஷ் கல்யாண்
Author: Disha | Posted Date : 10:00 (24/04/2018) A+       A-

விஜய் சேதுபதியின் இயக்குநருடன் கைக்கோர்க்கும் ஹரீஷ் கல்யாண்

Apr 24


விஜய் சேதுபதியை வைத்து புரியாத புதிர் இயக்கிய ரஞ்சித், பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாணை வைத்து அடுத்தப் படத்தை இயக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

கடந்தாண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் புரியாத புதிர். ராமிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அறிமுக இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். விஜய் சேதுபதியின் ஜோடியாக காயத்ரியும், முக்கியமான ரோலில் மஹிமா நம்பியாரும் நடித்திருந்தனர். 

விக்ரம் வேதாவில் கவனத்தை ஈர்த்த இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இந்தப் படத்தில்தான் அறிமுகம் ஆனார். படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாகப் பாஸிட்டிவ் லிஸ்ட்டில் இடம் பெற்றது. 

தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி தனது இரண்டாவது படத்திற்குத் தயாராகிவிட்டார். இந்த முறை ஹரீஷ் கல்யாணை ஹீரோவாக வைத்து இயக்குகிறார். பெயர் மற்றும் ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லையாம். புதுப் படம் பற்றி, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதைத் தொடர்ந்த, இயக்குநரிடம் கேட்டபோது, படம் உறுதியாகிவிட்டது. படத்தின் மற்ற டெக்னீஷியன்களைப் பற்றி விரைவில் தெரிவிப்பேன் என்றார். 

வாழ்த்துகள் வளர்க...