சாந்தினி நடிக்கும் த்ரில்லர் படத்தின் துவக்க விழா!
Author: Bala Bharathi | Posted Date : 05:30 (24/04/2018) A+       A-

சாந்தினி நடிக்கும் த்ரில்லர் படத்தின் துவக்க விழா!

Apr 24


நடிகை சாந்தினி நடிக்கும் ’ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி என்கிற த்ரில்லர் படத்தின் துவக்க விழா நடைபெற்றது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது த்ரில்லர் படங்களாகத்தான் இருக்கும். மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் இந்தப் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குனர்கள் கூட த்ரில்லர் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர். அந்த வகையில்,’ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி என்கிற த்ரில்லர் படம் தயாராகிறது. 

பல படங்களில் ஹீரோயினாகா நடித்திருக்கும் சாந்தினி, இந்த த்ரில்லர் படத்தில் நாயகியாக நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் சாந்தினியை மையப்படுத்தியே கதை அமைக்கப்பட்டுள்ளது. ’எமன்’ படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் ’போராளி’ திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 


அறிமுக இயக்குநர் ஆர்.வி.சுரேஷ் இயக்கும் இந்தப் படத்தை ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்கு டி.ஆர்.கிருஷ்ண சேத்தன் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் ஹேமந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பூஜை நேற்று மாமல்லபுரத்தில் நடந்தது. ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ். குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.