பிரசன்னாவுடன் ஜோடி சேரும் ஆண்ட்ரியா !
Author: Bala Bharathi | Posted Date : 08:45 (24/04/2018) A+       A-

பிரசன்னாவுடன் ஜோடி சேரும் ஆண்ட்ரியா !

Apr 24

 

நடிகர் பிரசன்னாவும், நடிகை ஆண்ட்ரியாவும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர்.

எந்த இமேஜ் வட்டத்துக்குள்ளேயும் சிக்காமல் எந்த காதாப்பாத்திரத்தை கொடுத்தாலும் அதில் தனது அழுத்தமான முத்திரையைப் பதிக்க கூடியவராக இருப்பவர் நடிகர் பிரசன்னா.’நடிச்சா ஹீரோ சார்’என்றெல்லாம் அடம்பிடிக்காமல் வில்லனாக நடிக்க சொன்னாலும் எந்த மறுப்பும் இல்லமல் நடித்து விட்டுப் போவார். சமீபத்தில் வந்த, ’திருட்டுப் பயலே-2’ படம், அவரின் வில்லன் நடிப்புக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

அதே போல, ஆண்ட்ரியாவின் சிறந்த நடிப்புக்கு நல்ல சான்றாக‘தரமணி’படம் அமைந்தது.வரவிருக்கும்’வட சென்னை’அவரின் நடிப்பை இன்னும் மெருகேற்ற இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் பிரசன்னாவும், நடிகை ஆண்ட்ரியாவும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.’விடியும் முன்’படத்தை இயக்கிய பாலாஜி குமார், இப்படத்தை இயக்குகிறார். இதுவொரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை என்பதால் பிரசன்னாவும், ஆண்ட்ரியாவும் இருப்பார்கள் என்பது இயக்குநரின் நம்பிக்கை! 

மேலும், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மடோனா செபாஸ்டியன் மற்றும் யோகி பாபுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.