’கண்மணி பாப்பா’படக்குழுவுக்கு உதவியவிஜய் சேதுபதி
Author: Bala Bharathi | Posted Date : 09:30 (24/04/2018) A+       A-

’கண்மணி பாப்பா’படக்குழுவுக்கு உதவியவிஜய் சேதுபதி

Apr 24


நடிகர் விஜய் சேதுபதி, ’கண்மணி பாப்பா’ என்ற படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று அவரது அலுவலகத்தில் வெளியிட்டார்.

வனஜா ஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத் தயாரிக்கும் படம் ’கண்மணி பாப்பா’. அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில், 

’சேதுபூமி’பட நாயகன் தமன்குமார் கதாநாயகனாகவும், மியாஸ்ரீ கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் ’கண்மணி பாப்பா’.இந்தப் படத்தில் காமெடி நடிகர் கொட்டாச்சி மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மானஸ்வி, தற்போது நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’, த்ரிஷாவின் ‘சதுரங்கவேட்டை - 2’போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இந்தப் படத்தில் சிங்கம் புலி, நாகா, சிவம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீசாய்தேவ் இசையமைக்க, அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி இயக்கியுள்ளார்.வனஜா ஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத் தயாரிக்கிறார். 

குழந்தையை மையமாக வைத்து ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்து உருவாகியிருக்கும் இந்த சிறு பட்ஜெட் படத்திற்கு உதவும் விதத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று அவரது அலுவலகத்தில் வெளியிட்டார். 

சமீபத்தில் நடந்து முடிந்த தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் தாமதமாக வெளியாகும் படங்களின் வரிசையில், தற்போது ’கண்மணி பாப்பா’வும் காத்திருப்பதாகவும், விரைவில் படம் வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.