24-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்
Author: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் | Posted Date : 12:02 (24/04/2018) A+       A-

24-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

Apr 24
1 / 14 Daily-Free-Astrology-24-4-201824-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம்...

விளம்பி வருஷம் I உத்தராயணம் I வஸந்தருது I சித்திரை 11 I இங்கிலீஷ்: 24 April 2018 I செவ்வாய்க்கிழமை

நவமி பகல் 1.56 மணி வரை. பின் தசமி I ஆயில்யம் மாலை 5.14 மணி வரை. பின் மகம்

கண்டம் நாமயோகம் I கௌலவம் கரணம் I சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 1.43 I அகசு: 30.51 I நேத்ரம்: 2 I ஜீவன்: 1/2 I மேஷ லக்ன இருப்பு: 7.10 I சூர்ய உதயம்: 6.01

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30 I எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

இன்று கீழ் நோக்கு நாள். I கன்னிகா பரமேசுவரி பூசை. I திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை சேச வாகனத்தில் இரவு சந்திரப் பிரபையில் பவனி.

மதுரை சொக்கநாதர் நந்தீசுவர யாளி வாகனத்தில் திருவீதிவுலா.

திதி: திதித்துவயம் I சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

2 / 14 Daily-Free-Astrology-24-4-201824-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

தினபலன் - 24.04.2018, செவ்வாய்கிழமை. கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்!
இன்றைய கிரக நிலை:
மேஷ ராசியில் சூரியன் - ரிஷப ராசியில் சுக்கிரன் - கடக ராசியில் சந்திரன், ராகு - துலா ராசியில் குரு (வ) - தனுசு ராசியில் செவ்வாய், சனி - மகர ராசியில் கேது - மீன ராசியில் புதன் என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

கிரக மாற்றம்:
இன்று மாலை 5.13க்கு சந்திர பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார்.

3 / 14 Daily-Free-Astrology-24-4-201824-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

மேஷம்:
பிறர் குற்றங்களை எளிதில் மன்னிக்கும் குணமுடைய மேஷ ராசிக்காரர்களே இன்று கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

4 / 14 Daily-Free-Astrology-24-4-201824-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

ரிஷபம்:

தனது நேர்மையான உணர்வுகளால் வாழ்வில் வெற்றி பெறும் ரிஷப ராசிக்காரர்களே இன்று செய்யாத தவறுக்கு உங்களை சிக்க வைக்க யாரேனும் முயற்சிப்பார்கள். எனினும் உங்களது சாதுர்யத்தால் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிப்பீர்கள். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

5 / 14 Daily-Free-Astrology-24-4-201824-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

மிதுனம்:

எந்த ஒரு சிறிய விஷயத்தையும் கவனமாக கிரகித்துக் கொள்ளும் தன்மை உடைய மிதுன ராசிக்காரர்களே இன்று இயந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். வீண் செலவுகளை தவிர்த்தல் நலம். நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

6 / 14 Daily-Free-Astrology-24-4-201824-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

கடகம்:

நிறைய யோசிக்கும் திறமையுடைய கடக ராசிக்காரர்களே இன்று தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். குழந்தைகள் நலன் சிறக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பர். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்த்து சரியாகும். கணவன் - மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

7 / 14 Daily-Free-Astrology-24-4-201824-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

சிம்மம்:

அதிகார தோரணையும் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளாத குணமுடைய சிம்மராசியினரே இன்று கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

8 / 14 Daily-Free-Astrology-24-4-201824-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

கன்னி:

எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண துடிக்கும் குணமுடைய கன்னி ராசிக்காரர்களே இன்று புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேசுவீர்கள். உங்களைப் பற்றிப் புறம் பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து நாசூக்காக விலகி விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

9 / 14 Daily-Free-Astrology-24-4-201824-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

துலாம்:

எவரையும் தம்பால் இழுத்துக் கொள்ளும் வசீகர சக்தி படைத்த துலா ராசியினரே இன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

10 / 14 Daily-Free-Astrology-24-4-201824-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

விருச்சிகம்:

முன்கோபத்தை குறைத்து செயல்படுவதன் மூலம் அதிர்ஷ்ட பாதையில் முன்னேற்றங்கள் பல காணும் விருச்சிக ராசிக்காரர்களே இன்று சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். பெரும் பொருள்வரவை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த செல்வம் உங்களிடம் வந்து சேரும். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் உங்களிடம் வந்து சேர்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

11 / 14 Daily-Free-Astrology-24-4-201824-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

தனுசு:

மனசாட்சிக்கு கட்டுபட்டு செயல்படும் தனுசு ராசியினரே இன்று குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பர்கள். கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

12 / 14 Daily-Free-Astrology-24-4-201824-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

மகரம்:

தோல்விகளை வெற்றியின் படிகளாக கருதி எதை பற்றியும் கவலைப்படாமல் செயல்படும் மன உறுதி கொண்ட மகர ராசிக்காரர்களே இன்று தெய்வ காரியங்களை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் வராமல் இருக்க குலதெய்வ வழிபாடும் முக்கியம். சில வேளைகளில் வேலைப்பளு காரணமாக உணவு சரியான நேரத்தில் உட்கொள்ள முடியாமல் போகலாம். கவனம் தேவை. பரம்பரை சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமான முடிவு வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

13 / 14 Daily-Free-Astrology-24-4-201824-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

கும்பம்:

ஆதரவற்றவர்களை ஆதரிக்கும் குணமுடைய கும்ப ராசிக்காரர்களே இன்று புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 6

14 / 14 Daily-Free-Astrology-24-4-201824-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

மீனம்:

தம்மை போலவே மற்றவர்களும் காலத்தை வீணாக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் மீன ராசியினரே இன்று பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பையோகெமிஸ்ட்ரி மற்றும் ஜியாலஜி சம்பந்தப்பட்ட துறைகளில் பயில்வோருக்கு மிகச் சிறப்பான காலமாகும். விரும்பிய பாடம் கிடைக்காவிட்டால் கிடைத்த பாடத்தை விருப்பத்துடன் படியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

GO BACK

RELATED STORIES