ஹிட்லர் மீசைக்கு மற்றொரு அர்த்தத்தை தந்த இவரை தெரியாதவர்களே இல்லை!
Author: Sujatha | Posted Date : 08:36 (16/04/2018) A+       A-

ஹிட்லர் மீசைக்கு மற்றொரு அர்த்தத்தை தந்த இவரை தெரியாதவர்களே இல்லை!

Apr 16


இன்றைய இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை தலைமுறை தாண்டி நகைசுவை உலகில் பிரபலமானவர் சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின். திரைப்படங்களில் இவர் பயன்படுத்திய நகைச்சுவை காட்சிகளைப் பயன்படுத்தாத உலகத் திரைப்படங்களே இல்லை என்று கூறிவிடலாம்.  இவர் நடித்த படங்களின் விசிடிக்கள் இன்றும் உலகம் முழுவதும் விற்பனையாகின்றன. இத்தகைய  உலக சரித்திர புகழ்மிக்க நாயகனின் பிறந்தநாள் முன்னிட்டு அவரை பற்றிய சிறு தொகுப்பு: 

Q லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் பிறந்தவர் 1889 ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி சார்லி பிறந்தார். இவரது தந்தை இசை அரங்குகளில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். குடி போதைக்கு அடிமையான சார்லி தந்தை, மனைவி மற்றும் அவரது குழந்தையை தனியே விட்டு ஓடி விட்டார்.

Q இதனால், குடும்ப வறுமையை சமாளிக்க அவரது தாய்  ஐந்து வயது சிறுவன் சார்லியை மேடையில் ஏற்றினார். அவரும்  ஆடிப்பாடி மற்றவர்களைப் போல பேசிக்காட்டி முதல் நாளன்றே ரசிகர் கூட்டத்தை வசியப்படுத்தி விட்டான்.

Q இளம் கலைஞரின் அபாரத் திறமையை உணர்ந்த ‘கீ ஸ்டோன்’ சினிமா நிறுவனத் தயாரிப்பாளர் தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். இவர் நடித்த முதல் மவுனத் திரைப்படம் ‘மேக்கிங் ஏ லிவிங்’ 1914-ல் வெளிவந்தது. ‘கிட் ஆட்டோ ரேசஸ்’ இவரது இரண்டாவது படம். இதில் தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத் தொப்பி, சிறு தடி’ என்ற இந்த கெட்டப்பில் இவரைப் பார்த்த உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. இதுவே பின்னர் இவரது அடையாளமானது. படம் பிரம்மாண்ட வெற்றியை ஈட்டியது.

Q ஒரே வருடத்தில் 35 திரைப்படங்களில் நடித்தார். அனைத்துமே சாதனை படைத்தன. வெறும் நடிப்பு மட்டும் இல்லாமல், கதை, வசனம், இயக்கம், என அனைத்து துறைகளிலும் தன் தனி முத்திரையைப் பதித்தார். நடன அமைப்பு, இசையமைப்பையும்கூட இவர் விட்டுவைக்கவில்லை. பணமும், பெயரும் புகழும் குவிந்தது.


Q 1919-ல் யுனைடட் ஆர்டிஸ்ட்’ என்ற ஸ்டுடியோவைத் தொடங்கினார். 1924-ல் இவர் தயாரித்த திரைப்படம் தி கிட் (The Kid) மகத்தான வெற்றி பெற்றது தொடர்ந்து வெற்றி மேல் வெற்றிதான். சமகால சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து இவர் தயாரித்த சிறந்த திரைப்படங்களில் ‘தி இமிகிரன்ட்’ முதன்மையானது.

Q இவரது நிறுவனம் படங்களைத் தயாரித்ததுடன் விநியோகமும் செய்தது. 1936-ல் மவுனப் பட யுகம் நிறைவடைந்து பேசும் படக்காலம் தொடங்கியது. ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற பேசும் படம் தயாரித்தார். இதில் இவர் பேசாமல்தான் நடித்தார். இந்தப் படமும் மகத்தான வெற்றி பெற்றது.

Q இவரது தி இம்மிகிரன்ட், தி கிட், தி கோல்ட் ரஷ், சிட்டி லைட்ஸ், மாடர்ன் டைம்ஸ், தி கிரேட் டிக்டேடர் ஆகிய ஆறு திரைப்படங்கள் அமெரிக்காவின் நேஷனல் ஃபிலிம் ரெஜிட்ரி அமைப்பில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இரண்டு முறை ஆஸ்கர் சிறப்பு விருதுகளை வென்றுள்ளார்.

Q இங்கிலாந்து அரசு 1985-ல் இவரது உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை வெளியிட்டது. உலகையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து ஹாலிவுட்டில் தனித்துவம் வாய்ந்த மேதையாக இன்றளவும் போற்றப்படும் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் 1977-ம் ஆண்டில் 88-வது வயதில் காலமானார்.