உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்
Author: Sujatha | Posted Date : 10:23 (10/02/2018) A+       A-

உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்

Feb 10
1 / 9 Tips-to-Gain-Weight-உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்

உடல் எடை என்பது பலரின் பொதுவான பிரச்சனை. சிலர் உடல் எடை அதிகமாகிவிட்டால், அதனை குறைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இன்னும் சிலர் உடல் எடை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்களுக்கான டிப்ஸ்:

2 / 9 Tips-to-Gain-Weight-உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்

வேர்க்கடலை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் அதிகரிக்கும்.

3 / 9 Tips-to-Gain-Weight-உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்

முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடை அதிகரிக்கும்.

4 / 9 Tips-to-Gain-Weight-உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்

உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.

5 / 9 Tips-to-Gain-Weight-உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்

வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது.

6 / 9 Tips-to-Gain-Weight-உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்

தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.

7 / 9 Tips-to-Gain-Weight-உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்

பழங்களை விட தயிரில், 118 கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.

8 / 9 Tips-to-Gain-Weight-உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்ல, குறைந்தது, 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.

9 / 9 Tips-to-Gain-Weight-உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்

உலர் திராட்சையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள், பல ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

GO BACK