Aug
23

ரயில்வேயில் புதிதாக 2 லட்சம் பணியாளர்களை சேர்க்க திட்டம்
Author: anish | Posted Date : 08:36 (23/08/2017)A+       A-

ரயில்வேயில் புதிதாக 2 லட்சம் பணியாளர்களை சேர்க்க திட்டம்

Aug 23
Indian-Railway-plans-to-Hire-2-lakh-workers , ரயில்வேயில் புதிதாக 2 லட்சம் பணியாளர்களை சேர்க்க திட்டம்

அதிகரித்து வரும் ரயில் விபத்துகள் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் 2 லட்சம் பணியாளர்களை ரயில் பாதுகாப்புத்துறை பணியில் அமர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

உலகின் 4-வது மிகப்பெரிய ரயில்வே எனும் சிறப்பை பெற்ற இந்திய ரயில்வேயில் கடந்த சில ஆண்டுகளாவே ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரயில் விபத்துகளில் 650 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த வாரம் உ.பி-யில் நடைபெற்ற ரயில் விபத்தில் 23 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் பலவாறும் விமர்சித்திருந்தன.

இந்த நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் பாதுகாப்பு மற்றும் ரயில் தட ரோந்து பணிகளில் 2 லட்சம் பேரை புதிதாக நியமனம் செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த பணியில் சுமார் 16% இடங்கள் இன்னும் காலியாக தான் உள்ளன. ரயில் இருப்பு பாதைகளை மாற்றி அமைப்பதற்காக 15,000 கோடி ரூபாயை ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்ய உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ரயில் இருப்பு பாதை சோதனை எந்திரங்களை வாங்கவும் முடிவு செய்துள்ளது.

ஐசிஎஃப் ரயில் பெட்டிகளின் உற்பத்தியை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஐசிஎஃப் பெட்டிகளில் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு காணப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றிற்கு பதிலாக ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட எல்ஹச்பி ரயில் பெட்டிகளை அதிக அளவில் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை உபி-யில் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 50 பயணிகள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.