Aug
23

மணிப்பூர் முன்னாள் முதல்வர் ரிஷாங் காலமானார்
Author: anish | Posted Date : 10:04 (23/08/2017)A+       A-

மணிப்பூர் முன்னாள் முதல்வர் ரிஷாங் காலமானார்

Aug 23
Manipur-s--former-CM-Rishang-Keishing-expired-at-96 , மணிப்பூர் முன்னாள் முதல்வர் ரிஷாங் காலமானார்

மணிப்பூர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ரிஷாங் கெய்சிங் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 96.

1920-ஆம் ஆண்டு மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் பிறந்த அவர், 1972-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக தேர்வானார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் 1980 முதல் 1988 வரை மற்றும் 1994 முதல் 1997 வரை மணிப்பூரின் முதல்வராக பதவி வகித்தார். முதன் முதலில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் (1952-57) இவர் இடம் பெற்றிருந்தார்.

நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றி காணப்பட்ட அவர் கடந்த மாதம் மணிப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் காலமானார். உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைவு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து மணிப்பூரில் 3 நாட்கள் துக்க நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ரிஷாங்கின் மறைவுக்கு மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், கிரண் ரிஜ்ஜு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.