Aug
23

திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க ஆந்திர அரசு முடிவு
Author: anish | Posted Date : 11:26 (23/08/2017)A+       A-

திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க ஆந்திர அரசு முடிவு

Aug 23
Andhra-government-plans-to-provide-pension-for-transgenders , திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க ஆந்திர அரசு முடிவு

ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை துவங்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.

அனைத்து மக்களுக்கும் தரமான வாழ்க்கையை வழங்கும் வகையில் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் தர அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று அவர் அறிவித்தார். இது குறித்து பேசிய அவர், "கட்டமைப்புகளை நாங்கள் மேம்படுத்தி உள்ளோம். மின்சார பிரச்னைக்கு தீர்வு கொண்டு வந்துள்ளோம். திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும், அனாதைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளோம். மக்களின் பிரச்னைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம்.

அரசின் திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மக்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும். மக்களின் கருத்தை கேட்டறிய 1100 எனும் இலவச தொலைபேசி எண் சேவையும் துவங்கப்பட்டுள்ளது. அரசின் திட்டம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை இதில் தெரிவிக்கலாம். மணல் கொள்ளை மற்றும் டாஸ்மாக் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் குறித்து மக்கள் புகார் அளித்தால் உடனடியாக அவை அகற்றப்படும்" என தெரிவித்தார்.