Aug
23

புதிய 200 ரூபாய் நோட்டுகள் வெளியீடு
Author: muthumari | Posted Date : 02:36 (23/08/2017)A+       A-

புதிய 200 ரூபாய் நோட்டுகள் வெளியீடு

Aug 23
New-200rs-notes-released-by-Reserve-bank-of-india , புதிய 200 ரூபாய் நோட்டுகள் வெளியீடு

புதிய 200 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கான அரசாணையை மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் புழக்கத்தில் இருந்த 80% நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் திரும்பப் பெறப்பட்டது. சில்லறை தட்டுப்பாட்டால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர். இதைத்தொடர்ந்து புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தியும், அவை விலைமதிப்பு மிக்கவை என்பதால், சில்லறைத் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவியது.

சில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்க, புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடுவதற்கான அரசாணையை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.