Aug
23

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா???
Author: muthumari | Posted Date : 03:01 (23/08/2017)A+       A-

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா???

Aug 23
Railway-Minister-Suresh-Prabhu-resigns , ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா???

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடைபெறுவதால் அதற்கு பொறுப்பேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக சுரேஷ் பிரபு கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் நடந்த தொடர் விபத்துக்களால் மிகுந்த மன வேதனை அடைவதாக அவர் கூறியுள்ளார். எனவே விபத்துக்களுக்கு முழு பொறுப்பேற்று, ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடியை சந்தித்து அளித்துள்ளார். ஆனால் பிரதமர் மோடி அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் காத்திருக்கும் படி கூறியுள்ளார்.