மீன் விற்பனையாளர்களிடம் 195 கோடி கருப்பு பணம்
Author: Sujatha | Posted Date : 05:40 (13/02/2018) A+       A-

மீன் விற்பனையாளர்களிடம் 195 கோடி கருப்பு பணம்

Feb 13


கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மீன் மொத்த உற்பத்தியாளர்களிடம் வருமான வரி துறையினர் நடத்திய திடீர் சோதனையில் ரூபாய் 195 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்தது.

கடந்த வாரம் பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி, பெல்காம், பனாஜி ஆகிய 5  பகுதிகளில் உள்ள 43   சந்தேகத்துக்குரிய அலுவலகங்களில்  150 அதிகாரிகளை கொண்ட வருமான வரி துறையினர் தங்களுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பணங்களை சீனாவில் உள்ள இடைத்தரகர்க்ள் மூலமாக துபாய், ஓமன், மொரீஷியஸ், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவுக்கு ஹவாலா முறையில் அனுப்பி வைக்கப்பட்டது தெரிய வந்ததுள்ளது. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் 195 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது கணக்கில் வராத 88 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.