தலித் மாணவர் கொலை; அலஹாபாத்தில் கலவரம்
Author: SRK | Posted Date : 08:51 (13/02/2018) A+       A-

தலித் மாணவர் கொலை; அலஹாபாத்தில் கலவரம்

Feb 13


அலஹாபாத் பல்கலைக்கழக மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், நேற்று மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

சில தினங்களுக்கு முன், சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் திலீப் என்ற மாணவர் சில மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். பொது இடத்தில் வைத்து நடந்த இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. படுகாயமடைந்த திலீப், கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்தார். இந்த விவகாரம் மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

காவல்துறை இந்த விவாகரத்தில் சரியாக செயல்படவில்லை என கூறி, இரண்டு போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச சட்டமன்றத்தில் கூட இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பின. இந்நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மாவட்ட கலெக்டரின் வீட்டை சுற்றி வழைத்து போராட்டம் நடத்தி வந்த மாணவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் ஒரு பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. 

இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. சட்டசபையில், எதிர்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உ.பி மாநிலத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இறந்த மாணவர் குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கவும் அவர் கோரிக்கை வைத்தார்.