மீண்டும் கண்ணூரில் பயங்கரம்; காங்கிரஸ் தலைவர் படுகொலை
Author: SRK | Posted Date : 10:41 (13/02/2018) A+       A-

மீண்டும் கண்ணூரில் பயங்கரம்; காங்கிரஸ் தலைவர் படுகொலை

Feb 13


கேரளாவின் கண்ணூர் பகுதியில் இடதுசாரி வலதுசாரி கோஷ்டிகள் இடையே அரசியல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன. இந்நிலையில் அந்த பகுதியின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார்.

30 வயதான ஸுஹேய்ப், கீழலூர் பகுதியின் இளைஞர் காங்கிரஸ் மண்டல தலைவராக இருந்து வந்தார். நண்பர்களுடன் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவரை, சுற்றிவளைத்த மர்ம நபர்கள் 4 பேர், வெடி குண்டுகளை அவர் மீது வீசி, பின்னர் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். அவரது  நண்பர்கள் இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த கொலைக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இன்று முழுவதும் கண்ணூர் பகுதியில் முழு அடைப்பு நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.