2வது நாளாக ஸ்ரீநகரில் தொடரும் துப்பாக்கிச் சூடு
Author: SRK | Posted Date : 11:06 (13/02/2018) A+       A-

2வது நாளாக ஸ்ரீநகரில் தொடரும் துப்பாக்கிச் சூடு

Feb 13


நேற்று ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எஃப் தளத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். பாதுகாப்புக்கு நின்ற சி.ஆர்.பி.எஃப் வீரர் தீவிரவாதிகள் வருவதை கண்டுபிடித்து அவர்களை நோக்கி சுடத் துவங்கிய நிலையில், அங்கிருந்து தப்பி ஓடினர். அதே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 

தீவிரவாதிகளுக்கும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களும் இடையே நடந்து வந்த துப்பாக்கிச் சண்டை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.