ஸ்ரீநகர் தாக்குதல்: இரண்டு தீவிரவாதிகள் பலி
Author: Muthumari | Posted Date : 04:26 (13/02/2018) A+       A-

ஸ்ரீநகர் தாக்குதல்: இரண்டு தீவிரவாதிகள் பலி

Feb 13


இன்று காஷ்மீர் எல்லைப்பகுதியில் நடந்த தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று முதல் ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பதிலுக்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இரண்டு நாட்களாக தொடர்ந்து நடந்த தாக்குதல் என்பதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ராணுவ வீரர்களும் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.