ரூ.16,000 கோடிக்கு நவீன ஆயுதங்கள்: மத்திய அரசு ஒப்புதல்
Author: SRK | Posted Date : 10:25 (13/02/2018) A+       A-

ரூ.16,000 கோடிக்கு நவீன ஆயுதங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

Feb 13


சுமார் ரூ.16,000 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தத்திற்கு இன்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்புத்துறை ஆயுதங்கள் கையகப்படுத்துதல் கவுன்சில், பல மாதங்களாக ஆலோசித்து வந்த ஆயுதங்கள் ஒப்பந்தத்திற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, 16,000 கோடி ரூபாய்க்கு, ரைபிள் துப்பாக்கிகள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மற்றும் மெஷின் கன் துப்பாக்கிகள் ஆகியவை வாங்க திட்டமிட்டுள்ளது.

பல வருடங்களாக நிலுவையில் இருந்து வந்த ஆயுத ஒப்பந்தங்கள், சமீபத்தில் ரத்து செய்யப்பட்டன. புதிய ஒப்பந்தங்களின் படி, இந்தியாவில் ஆயுதங்கள் செய்ய முடிவெடுக்கப்பட்டது. குறிப்பிட்ட அளவு ஆயுதங்களை வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து கொண்டு வரவும், அதில் பெரும்பாலானவற்றை தனித்தனி பாகங்களாக கொண்டு வந்து இந்தியாவில், ஒன்றிணைக்க திட்டங்கள் வரையப்பட்டன. 

இதன்படி, 7,40,000 அசால்ட் ரைபிள்கள், 5,719 ஸ்னைப்பர் துப்பாக்கிகள் வாங்கவும், ரூ.18.19 கோடி மதிப்பில் லைட் மெஷின் கன் துப்பாக்கிகள் வாங்குகிறது இந்திய அரசு. அதிநவீன ஆயுதங்களான இவை, எல்லையில் முதலில் நிற்கும் ராணுவ படையினரிடம் கொடுக்கப்படும்.

சமீப காலமாக காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் ஆயுதங்களை புதுப்பிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது அரசு.