பா.ஜ-வில் சேர்ந்த முதல் நாளே சர்ச்சையை கிளப்பிய எம்.பி
Posted Date : 01:09 (13/03/2018) A+       A-

பா.ஜ-வில் சேர்ந்த முதல் நாளே சர்ச்சையை கிளப்பிய எம்.பி

Mar 13


உத்தர பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரான முன்னாள் ராஜ்ய சபா எம்.பி நரேஷ் அகர்வால், நேற்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். முதல் நாளே, ஜெயா பச்சனை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமாஜ்வாடி கட்சியில் மீண்டும் தனக்கு எம்.பி பதவி வழங்க இருந்த நிலையில், அதை ஜெயா பச்சனுக்கு கட்சித் தலைமை கொடுத்தது. இது குறித்து அதிருப்தி தெரிவித்த அகர்வால், பா.ஜ கட்சியில் சேர்ந்தார். பாரதிய ஜனதா கட்சி தேசிய கட்சி என்பதனாலும், மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் கொண்ட பெரிய கட்சியில் இருக்க வேண்டும், என்பதனால் பா.ஜ-வில் சேர்ந்துள்ளதாக அகர்வால் கூறினார். 

இந்நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பில், பேசிய அகர்வால், "சமாஜ்வாடி கட்சியில் என்னை சினிமாவில் ஆடும் ஒருவருடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர்" என ஜெயா பச்சனை விமர்சித்து பேசினார். இதற்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஸ்ம்ரிதி இரானி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.