சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்; 9 சிஆர்பிஎப் வீரர்கள் பலி
Posted Date : 02:21 (13/03/2018) A+       A-

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்; 9 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

Mar 13


சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 9 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். 

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சுக்மா பகுதியில் தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இன்று கிஸ்தாராம் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தியதில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த நிலையில் 4 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.