தீர்ப்பு வரும் வரை ஆதார் இணைப்புக்கு கால அவகாசம்: உச்சநீதிமன்றம்
Posted Date : 04:53 (13/03/2018) A+       A-

தீர்ப்பு வரும் வரை ஆதார் இணைப்புக்கு கால அவகாசம்: உச்சநீதிமன்றம்

Mar 13


ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை வங்கிக்கணக்கு, மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமாக்கப்பட்டு வருகிறது. பான் எண், வங்கிக்கணக்கு, மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

அதே நேரத்தில் ஆதார் இணைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றன. விசாரணையின் போது  ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. ஆதார் இணைப்பு தொடர்பான பல்வேறு வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. 

இன்று ஆதார் தொடர்பான வழக்குகளின் விசாரணையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, "ஆதார் வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படும் வரை வங்கிக்கணக்கு, மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது" என உத்தரவிட்டுள்ளது.