கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்!
Posted Date : 05:47 (13/03/2018) A+       A-

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்!

Mar 13


ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 1 கோடியே 16 லட்சம் ரூபாய் அளவிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 

ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை ரத்து செய்யுமாறு ஏற்கனவே கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் நிறுவனத்தின் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் அளவிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.