நிரவ் மோடி விவகாரம்: வங்கிகளை ஏற்கனவே எச்சரித்தோம் - ரிசர்வ் வங்கி
Posted Date : 09:21 (13/03/2018) A+       A-

நிரவ் மோடி விவகாரம்: வங்கிகளை ஏற்கனவே எச்சரித்தோம் - ரிசர்வ் வங்கி

Mar 13


பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ரூ.12,600 கோடி மோசடி விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், வங்கிகள் பயன்படுத்தும் 'SWIFT' சாப்ட்வேர் மூலம் இந்த மோசடி நடந்ததாக தெரிய வந்துள்ள நிலையில், அது குறித்து வங்கிகளை ஏற்கனவே எச்சரித்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

நிரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகளை பயன்படுத்தி, வெளிநாட்டு வங்கிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடனளிக்க உத்தரவாதம் கொடுத்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் வங்கிகளில் உள்ள பாதுகாப்பு முறைகள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்திய வங்கிகள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பின்தங்கி இருப்பதாகவும் அதுகுறித்து ரிசர்வ் வங்கி போதிய நடவடிக்கை எடுக்காததாகவும் பல தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2016ம் ஆண்டே இந்திய வங்கிகள் தங்களது SWIFT சாப்ட்வேர் பயன்பாடு குறித்து கவனமாக இருக்க வேண்டும் என இரண்டு முறை எச்சரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.