கௌரி லங்கேஷ் வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை
Posted Date : 03:17 (14/03/2018) A+       A-

கௌரி லங்கேஷ் வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை

Mar 14


பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு கமிட்டி, சந்தேகத்தின் பேரில் சமீபத்தில் கைது செய்யப்பட்டவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கன்னட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், மர்ம நபர்களால் பெங்களூரு உள்ள தனது வீட்டில் கொலை செய்யப்பட்டார். வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நவீன் குமார் என்பவருக்கு, கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்பிருப்பதாக தெரிந்தவுடன் போலீசார் அவரை கைது செய்தனர்.

சில இந்து வலதுசாரி அமைப்புகள் நடத்திய கூட்டங்களில் நவீன் குமார் கலந்து கொண்டதாக கூறப்பட்டாலும், அவருக்கும் எந்தவொரு அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் இதுவரை உறுதிபட தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில், நவீன் குமார் தான் குற்றவாளி என்பதற்கு ஆதாரம் உள்ளதாக சிறப்பு விசாரணை கமிட்டியின் அதிகாரி அனுசேத் தெரிவித்தார். மேலும், "குமாரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துவிட்டது. ஆனால்,  அதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை" என்றும் அவர் கூறினார்.