மோடி அரசிடம் இருந்து நாட்டை மீட்போம்: காங்கிரஸ்
Author: SRK | Posted Date : 09:36 (18/03/2018) A+       A-

மோடி அரசிடம் இருந்து நாட்டை மீட்போம்: காங்கிரஸ்

Mar 18


காங்கிரஸ் கட்சியின் 84வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று துவங்கியது. இந்த கூட்டத்தில், பாரதிய ஜனதா அரசின்  மோசமான அரசியலில் இருந்து நாட்டை மீட்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சில தினங்களுக்கு முன், நாட்டில் உள்ள எதிர்கட்சிகளை அழைத்து விருந்து கொடுத்த சோனியா, பா.ஜ-வை வீழ்த்த பெரும் கூட்டணியை சேர்க்க முயற்சித்து வருவதாகவும், 3வது கூட்டணி உருவாகாமல் இருக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டது. 

சமீபத்தில் நடந்த மிகப்பெரிய தேர்தல்களில் படுதோல்வியடைந்து வரும் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வெற்றிப்பாதையில் அழைத்து செல்ல இந்த கூட்டத்தில் புதிய அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், தேர்தல் தோல்விகள் குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் மோசமான பிரிவினைவாத அரசியலை வீழ்த்தி நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களின் பரம்பரையை சேர்ந்தவர்கள், என இந்த தீர்மானத்தில் என பா.ஜ கட்சி விமர்சிக்கப்பட்டது.

மேலும், மின்னணு வாக்கு இயந்திரங்களை விட்டு, வரும் தேர்தல்களை வாக்குசீட்டில் நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சர்ச்சையை குறிப்பிட்டு நீதித்துறையில் தலையிடுவதாகவும் மத்திய அரசு விமர்சிக்கப்பட்டது.