உல்லாச விடுதியை திறந்து வைத்த பா.ஜ.க எம்.பி
Author: Disha | Posted Date : 08:00 (16/04/2018) A+       A-

உல்லாச விடுதியை திறந்து வைத்த பா.ஜ.க எம்.பி

Apr 16


உத்திர பிரதேசம் மாநிலம்  லக்னோவில், உன்னாவோ மாவட்டத்தில் இரவு நேர உல்லாச விடுதியை பா.ஜ.க-வின் எம்.பி சாக்‌ஷி மகாராஜ் திறந்து வைத்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

உன்னாவோ மாவட்டத்தில் அலிகன்ஜ் எனும் இடத்தில் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு, அதனை இரவு நேர உல்லாச விடுதியாக மாற்றப் பட்டதாகத் தெரிகிறது. இதனை பா.ஜ.க எம்.பி சாக்‌ஷி மாகாராஜ் திறந்து வைத்தது அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதைப்பற்றி சாக்‌ஷி மகாராஜ், "உத்திர பிரதேச பா.ஜ.க முன்னாள் தலைவர் ராஜன் சிங் கேட்டுக் கொண்டதால், இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன். ஆனால் இது ஒரு உல்லாச விடுதி என எனக்குத் தெரியாது, அதோடு நான் ஒரு எம்.பி மட்டுமல்ல, துறவியும் கூட" எனத் தெரிவித்துள்ளார். 

இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், உன்னாவோ தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங்கை சில நாட்களுக்கு முன் சி.பி.ஐ கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொறுப்புள்ள எம்.பி உல்லாச விடுதியை திறந்து வைத்த சம்பவம் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.