வரதட்சணை கேட்டு மனைவியை கட்டி வைத்து அடித்து வீடியோ எடுத்த கொடூரன்
Author: Newstm Desk | Posted Date : 10:01 (16/04/2018) A+       A-

வரதட்சணை கேட்டு மனைவியை கட்டி வைத்து அடித்து வீடியோ எடுத்த கொடூரன்

Apr 16


உத்தர பிரதேசத்தில், வரதட்சணை கேட்டு மனைவியை கட்டி வைத்து அடித்து, அதை வீடியோ எடுத்து ஒருவர் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி-யின் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியிடம் ரூ.50,000 வரதட்சணையை வீட்டில் இருந்து வாங்கி வர வலியுறுத்தியுள்ளார் . முடியாது என மனைவி மறுத்ததால், அவரை காட்டுத்தனமாக தாக்கி, துப்பட்டாவில் கட்டி வைத்து, அதை வீடியோ எடுத்து, மனைவியின் வீட்டாரிடம் அனுப்பி, பணம் கேட்டுள்ளார். 

இந்த வீடியோவை பார்த்த பெண்ணின் வீட்டார், அதிர்ந்தனர். பின்னர், போலீசாரிடம் அதை காண்பித்து, சம்பந்தப்பட்டவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து அந்த பெண்ணிடம் கேட்டபோது, "என்னை 3 முதல் 4 மணி நேரம் கோபத்தில் கடுமையாக தாக்கினார். அதில் நான் மயங்கி விழுந்தேன். அதன்பின், முழித்து பார்த்த போது, என்னை ஃபேனில் கட்டி வைத்திருந்தார். அதை வீடியோ எடுத்து என் சகோதரரிடம் கொடுத்து பணம் கேட்டு மிரட்டினார். நான் படிக்காதவள். அதுதான் என் நிலைக்கு காரணம். என் வாழ்க்கையே சீரழிந்து விட்டது." என்றார்.

அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார், தற்போது தலைமறைவாகி விட்டனர். போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.