தீவிரவாதம் மனித உரிமைக்கு எதிரானது: சுஷ்மா ஸ்வராஜ்
Author: Newstm Desk | Posted Date : 02:37 (24/04/2018) A+       A-

தீவிரவாதம் மனித உரிமைக்கு எதிரானது: சுஷ்மா ஸ்வராஜ்

Apr 24

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தீவிரவாதம் அடிப்படையான மனித உரிமைக்கு எதிரானது, என்று தெரிவித்தார். 

இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பேக்கிஸ்தான், தஜிகிஸ்தான், கிரிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஷாங்காய் கூட்டுறவு மாநாடு இன்று தொடங்கியது.

இதன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் இந்தியாவின் சீன தூதர் கவுதம் பம்பவாலேவடன் 3 நாட்களுக்கு முன்னரே சென்றிருந்தார். 

இன்று அந்த மாநாட்டில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், "மனிதர்களின் அடிப்படை உரிமைகளுக்கு முக்கியமான எதிரி தீவரவாதமாகும். இது மனிதர்களின் வாழ்க்கை, அமைதியை அழித்து விடும். பயங்கரவாதத்தை அனுமதிக்கும் மற்றும் ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு எதிராக போராடி பயங்கரவாத அமைப்புகளை அழிக்க வேண்டும். 

உலகில் தற்சமயம் தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலிருந்து நாட்டை பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே போல் வர்த்தகத்தில் ஏற்படும் தடைகளை தவிர்க்க வழிமுறைகள் கொண்டு வர வேண்டும். வெளிநாட்டு பொருள்கள் இறக்குமதி செய்ய விதிக்கப்படும் தடைகளை நீக்க வேண்டும். இந்தியா ஷாங்காய் கூட்டுறவு அமைப்புடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது. இதன் மூலம் நம்முடைய பொருளாதாரம் வளர்ச்சியடையும். உலகளாவிய பொருளாதாரம் மிகவும் வெளிப்படையாகவும், சமநிலை கொண்டதாகவும் உள்ளது என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது" என்றார்.