கொலை முயற்சியில் இருந்து தப்பித்த பாலஸ்தீன பிரதமர்
Posted Date : 10:57 (13/03/2018) A+       A-

கொலை முயற்சியில் இருந்து தப்பித்த பாலஸ்தீன பிரதமர்

Mar 13


இன்று காசா பகுதிக்கு சென்றிருந்த பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்டல்லாவை கொல்ல முயற்சி நடத்தப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து அவர் தப்பித்தார். 

பாலஸ்தீனத்தை சேர்ந்த காசா என்ற சிறிய பகுதி, ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் உள்ளது. ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அங்கு சென்றிருந்தார் பிரதமர் ஹம்டல்லா. காசாவில் அவரது கான்வாய் சென்றுகொண்டிருந்த வழியில், சாலையோரம் ஒரு வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமரை கொல்ல இந்த வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. ஹமாஸ் அமைப்பு, இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், பிரதமருக்கு போதிய பாதுகாப்பு வழங்காததை குறிப்பிட்டு, ஹமாஸ் அமைப்புக்கு பாலஸ்தீன அரசு கண்டனம் விடுத்துள்ளது.